8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 |மொழியை ஆள்வோம்| கேள்விகள் மற்றும் பதில்கள்
மொழியை ஆள்வோம்!
கேட்க.
கைவினைக் கலைகளின் சிறப்புகள் குறித்த ஒலிப்பதிவைக் கேட்டு மகிழ்க.
கீழ்க்காணும் தலைப்பில் இரண்டு நிமிடம் பேசுக.
1. கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்,
விடை
பெருமை மிகுந்த சான்றோர் சபைக்கு என் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இப்பெருமைமிகு சபையில் நான் பேச எடுத்துக் கொண்ட தலைப்பு கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் என்பதாகும்.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்பார்கள். அதைப்போல ஏட்டுப் படிப்பு படித்தவர்களுக்கு எந்த வேலையும் கிடைப்பதாகத் தெரியவில்லை.
படித்தாலும், படித்துப் பட்டம் பெற்றாலும் கைத்தொழில் ஒன்றையும் நாம் கூடவே, சேர்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும். படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும் வரை அந்த வேலைக்காகக் காத்திராமல் கற்ற கைத்தொழில் நமக்கு மிகவும் பயன்படும்.
தையல், ஓவியம், மரவேலை, மின்னணுச் சாதனங்கள் பழுதுபார்ப்பு, தட்டச்சு, கணிப்பொறி, கூடை பின்னுதல், அலங்காரப் பொருட்கள் செய்தல் இவற்றைப் பொழுதுபோக்கிற்காக நாம் பள்ளியில் கற்றாலும், அங்கு ஆழமாக ஆழ்ந்து கற்க வேண்டும். அதுவேதான், பிற்காலத்தில் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும் வரையில் நமக்கு நல்ல சம்பாத்தியத்தைக் கொடுக்கும்.
ஏட்டுக்கல்வி கைவிட்டாலும், கைத்தொழில் கல்வி உன்னைக் கைவிடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, இளைஞர்களாகிய நாம் கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லி என்னுடைய உரையை நிறைவு செய்கின்றேன்.
2. இதயம் கவரும் இசை.
விடை
என்னை ஈன்ற தாய் மொழிக்கும், இந்தச் சான்றோர் பேரவைக்கும் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக்கொண்டு, இதயம் கவரும் இசை என்ற நல்லதொரு தலைப்பில் சில நிமிடங்கள் பேசுகின்றேன். ஒவ்வொருநாளும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. துன்பங்கள் நம்மைத் துரத்தும் போது மன அமைதி தானாக தேடி வருவதில்லை . இசையின் பக்கம் நாம் தான் ஓடி வர – வேண்டும். புல்லாங்குழல் இசையும், வீணை இசையும், நாத முழக்கமும், மத்தளம் இசையும் மனதைப் பண்படுத்தும். இசைக்கச்சேரி கேட்கும் போது இதயமெல்லாம் மென்மையாகிவிடும்.
சங்க காலத்தில் தலைவன் ஒருவன் கள் உண்ட மயக்கத்தில் படுத்து கிடக்கின்றான். தொலைவில் தலைவிதினையைக் காயவைத்துக் கொண்டிருக்கின்றாள். தலைவன் படுத்து இருந்த இடத்தை நோக்கி மத யானை ஒன்று ஓடி வருகின்றது .ஐயோ! தலைவனுக்கு என்ன ஆகுமோ? என்று கவலைப்படாமல், தலைவி அருகிலிருந்த யாழை எடுத்து மீட்டினாள். மதம் பிடித்த யானை யாழ் இசையில் மயங்கி தலைவனை மிதிக்காமல் தெளிந்து சென்றதாம். இசை உயிரையும் காப்பாற்றும்.
குழந்தை பிறந்ததும் தாலாட்டி இசை செய்தான், அவன் வளர்ந்து திருமணம் ஆகும் போதும் மங்கள இசைதான். இப்படி இசை வாழ்வில் எத்தனையோ இடத்திலும் இடம் பெற்றிருக்கிறது. நம் வாழ்க்கையில் ‘இதயம் கவரும் இசை அனைவரையும் கவரும் தசை’ என்று சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன்.
நன்றி! வணக்கம்!!
சொல்லக் கேட்டு எழுதுக.
முல்லை நில மக்களாகிய ஆயர்கள் குழல் ஊதுவதில் வல்லவர்கள். இதனைச் சம்பந்தர் திருப்பதிகத்தில் அமைந்த நிகழ்ச்சி ஒன்று விளக்குகிறது. திருவண்ணாமலைச் சாரலில் ஆயர் ஒருவர் ஆநிரைகளையும் எருமையினங்களையும் மேய்த்துக் கொண்டிருந்தார். மாலையில் அவற்றையெல்லாம் ஒன்று திரட்டினார். அப்போது எருமை ஒன்று காணாமல் போனதை அறிந்தார். தம் கையிலிருந்த குழலை எடுத்து இனிய இசையை எழுப்பினார். இன்னிசை கேட்ட எருமை அவரை வந்தடைந்தது. இவ்வாறு ஆயர்களின் இசைத் திறத்தைத் திருப்பதிகம் விளக்குகிறது.
கோடிட்ட இடங்களில் பொருத்தமான சொல்லுருபுகளை இட்டு நிரப்புக.
( கொண்டு, இருந்து, உடைய, காட்டிலும், ஆக, நின்று, உடன், விட, பொருட்டு)
1. இடி உடன் மழை வந்தது.
2. மலர்விழி தேர்வின் பொருட்டு ஆயத்தமானாள்.
3. அருவி மலையில் இருந்து வீழ்ந்தது.
4. தமிழைக் காட்டிலும் சுவையான மொழியுண்டோ !
5. யாழ், தமிழர் உடைய இசைக் கருவிகளுள் ஒன்று.
பின்வரும் இசைக்கருவிகளின் பெயர்களை அகரவரிசைப்படுத்துக.
படகம், தவில், கணப்பறை பேரியாழ், உறுமி, உடுக்கை, தவண்டை, பிடில், நாகசுரம், மகுடி.
விடை
உடுக்கை, உறுமி, கணப்பறை, தவண்டை , தவில், நாகசுவரம், படகம், பிடில், பேரியாழ், மகுடி.
அறிந்து பயன்படுத்துவோம்.
இணைச்சொற்கன்
தொடர்களில் சில சொற்கள் இனையாக இடம்பெற்று, பொருளுக்கு வலுவூட்டும். அவற்றை இணைச்சொற்கள் என்கிறோம்.
(எ.கா.) தாய் குழந்தையைப் பாராட்டிச் சீராட்டி வளர்த்தாள்.
இளையச்சொற்கள் மூன்று வகைப்படும். அவை,
1. நேரிணை, 2. எதிரிணை, 3. செறியிணை
அ) ஒரே பொருளைத் தரும் இணை நேரிணை எனப்படும்.
(எ.கா.) சீரும் சிறப்பும், பேரும் புகழும்
ஆ) எதிரெதிர்ப் பொருளைத் தரும் இணை எதிரிணை எளப்படும்.
(எ.கா.) இரவுபகல், உயர்வுதாழ்வு
இ) பொருளின் செறிவைக் குறித்து வருவன செறியிணை எனப்படும்.
(எ.கா) பச்சைப்பசேல், வெள்ளைவெளேர்
பின்வரும் இணைச்சொற்களை வகைப்படுத்துக.
உற்றார் உறவினர், விருப்புவெறுப்பு, காலைமாலை, கன்னங்கரேவ், ஆடல்பாடல், வாடிவதங்கி, பட்டிதொட்டி, உள்ளும்புறமும், மேடுபள்ளம், நட்டநடுவில்.
விடை
சரியான இணைச்சொற்களை இட்டு நிரப்புக.
(மேடுபள்ளம், ஈடுஇணை, கல்விகேள்வி, போற்றிப்புகழப்பட, வாழ்வுதாழ்வு, ஆடிஅசைந்து)
1. சான்றோர் எனப்படுபவர் கல்விகேள்வி களில் சிறந்தவர் ஆவார்.
2. ஆற்று வெள்ளம் மேடுபள்ளம் பாராமல் ஓடியது.
3. இசைக்கலைஞர்கள் போற்றிப்புகழப்பட வேண்டியவர்கள்.
4. தமிழ் இலக்கியங்களின் பெருமைக்கு ஈடுஇணை இல்லை.
5. திருவிழாவில் யானை ஆடிஅசைந்து வந்தது.
கடிதம் எழுதுக.
இருப்பிடச் சான்று வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பம் எழுதுக.
விடை
அனுப்புநர்
வே. சஞ்சய்,
த/பெ. ரா. வேம்பு
34, ஏ.டி. காலணி
தென்காசி - 627811
பெறுநர்
உயர்திரு. வட்டாட்சியர் அவர்கள்,
வட்டாட்சியர் அலுவலகம்,
தென்காசி
மதிப்புக்குரிய அய்யா,
பொருள் : இருப்பிடச் சான்றிதழ் வேண்டுதல் சார்பாக. வணக்கம்.
தென்காசி, அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கின்றேன். 34, ஏ.டி. காலணி, தென்காசி – 627811 என்ற முகவரியில் பத்து ஆண்டுகளாக நாங்கள் வசித்து வருகின்றோம். அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இருப்பிடச் சான்றிதழ் தேவைப்படுகின்றது. இத்துடன் குடும்ப அட்டை நகலும் ஆதார் அட்டை நகலும் இணைத்துள்ளேன். ஆகவே, எனக்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி!
இடம் : தென்காசி
நாள் : 25.06.2023
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
வே. சஞ்சய்
உறைமேல் முகவரி:
பெறுநர்
உயர்திரு. வட்டாட்சியர் அவர்கள்,
வட்டாட்சியர் அலுவலகம்,
தென்காசி.
Comments
Post a Comment