Skip to main content

Share your materials

you can send your materials to our mail zealstudymaterials@gmail.com or whatsapp no 7604911953 We can post it in our website

TNPSC Group 5: TNPSC குரூப் 5A தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி; அப்ளை லிங்க் உள்ளே!

TNPSC Group 5: TNPSC குரூப் 5A தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி; அப்ளை லிங்க் உள்ளே!TNPSC Group 5 Notification 2022: தமிழ்நாடு தலைமைச் தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 161 இடங்களை நிரப்ப நடத்தப்படும் குரூப் 5 ஏ தேர்வுக்கான தேதி வெளியீடு. குரூப் 5 ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி என்பதால், விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான http://tnpsc.gov.in-யில் விண்ணப்பிக்கலாம். இது குறித்த விரிவான தகவலுக்கு விண்ணப்பதாரகள் கீழே உள்ள தகவலை பார்வையிடவும். 
ஹைலைட்ஸ்:TNPSC குரூப் 5 ஏ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி.
ஆர்வம் உள்ளவர்கள் http://tnpsc.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்.
டிசம்பர் 18 ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), குரூப் 5 இன் கீழ் பணியமர்த்தப்படும் தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 161 பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்பதாக சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி, தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
TNPSC குரூப் 5A தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள், தங்களின் விண்ணப்பத்தை இன்று மாலை 6 மணிக்குள் ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். ஏனென்றால், இப்பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 21, 2022 ஆகும். மேலும், விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 26 முதல் 28 வரை தங்கள் படிவங்களில் மாற்றங்களை அதாவது திருத்தங்களை செய்யலாம்.
டிஎன்பிஎஸ்சி ASO மற்றும் உதவியாளர் பணிகளுக்கான தேர்வுகளை டிசம்பர் 18, 2022 அன்று காலை 9.30 முதல் மதியம் 12.30 வரையும், பிற்பகல் 2.00 முதல் மாலை 5.00 வரையும் என இரண்டு ஷிப்டுகளாக நடத்தும். இந்த தேர்வு மூலம் டிஎன்பிஎஸ்சி குரூப் 5A-யின் கீழ் உள்ள சுமார் 161 காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும். மேலும் இது குறித்த விரிவான தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை கவனமாக சரிபார்க்கவும்.
காலியிட விவரங்கள்:
உதவிப் பிரிவு அலுவலர் (சட்டம் மற்றும் நிதித் துறை தவிர) - 74.
உதவிப் பிரிவு அலுவலர் (நிதித் துறை) - 29
உதவியாளர் (சட்டம் மற்றும் நிதித்துறை தவிர) - 49.
உதவியாளர் (நிதித்துறை) - 9.தகுதி வரம்பு:
வயது வரம்பு: ASO பதவிகளுக்கு 18 முதல் 35 ஆண்டுகள்; உதவியாளர் பதவிக்கு, ஜூலை 1, 2022 ஆம் தேதியின் படி, 18 முதல் 30 வயதுக்கு இருக்க வேண்டும். 
இவர்களுக்கான கல்வித் தகுதி குறித்து பேசுகையில், விண்ணப்பதாரர் யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு விண்ணப்பத்தாரர் https://tnpsc.gov.in/Document/english/21_2022_Group_V_A_Notfn_Eng.pdfசெய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடலாம்.
விண்ணப்பக் கட்டணம் குறித்து பேசினால், TNPSC குரூப் 5 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பதிவுக் கட்டணமாக ரூ.150 மற்றும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும்.
TNPSC குரூப் 5 ஆட்சேர்ப்பு 2022-க்கு எப்படி விண்ணப்பிப்பது? 
முதலில், TNPSC இணையதளத்தை tnpsc.gov.in பார்வையிடவும்.
உள்நுழைவு ID மற்றும் கடவுச்சொல்லை பதிவு செய்து உருவாக்கவும்.
இப்போது "ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்" என்பதைக் கிளிக் செய்யவும்.
நற்சான்றிதழ்களைப் பயன்படுத்தி உள்நுழைந்து, பதவிக்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
ஆவணங்களைப் பதிவேற்றவும், கட்டணம் செலுத்தி படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.
எதிர்கால குறிப்புக்கு ஒரு பிரிண்ட்அவுட் எடுக்கவும்.இல்லையெனில், விண்ணப்பதாரர் https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ== செய்வதன் மூலம் ஆன்லைன் விண்ணப்பத்திற்கான நேரடி இணைப்பை பெறலாம்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) தேர்வு செய்து வருகிறது. திறமையான ஊழியர்களை கண்டறிய பல்வேறு போட்டித்தேர்வுகள் (tnpsc group 1 syllabus in tamil) மற்றும் நேர்காணல் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 1, குரூப் 2 &2A, குரூப் 3, குரூப் 4 என குரூப் 8 வரை பல்வேறு பதவிகளுக்கு தேர்வுகளை நடத்துகிறது.

Comments

Popular posts from this blog

6th Tamil Lesson Plan ஒளி பிறந்தது Zeal Study Lesson Plan

A good lesson plan guides a teacher how to take the classes by following the steps prescribed by the Government Educational department. Following the above steps

Zeal study lesson plan 6th Tamil Lesson Plan - தமிழர் பெருவிழா -6ஆம் வகுப்பு தமிழ் கற்றள் விளைவுகள் அடிப்படையிலான பாடக்குறிப்பு

 வணக்கம். நமது குழுவின் சார்பாக வாரந்தோறும் பாடக்குறிப்புகள் வழங்கி வருகின்றோம். இது உங்களுக்கு

7ஆம் வகுப்பு தமிழ் கற்றல் விளைவு அடிப்படையிலான பாடக்குறிப்பு- பள்ளி மறுதிறப்பு, வாழ்விக்கும் கல்வி

 நமது குழுவின் சார்பாக பாடக்குறிப்பு வாரந்தோறும் அனுப்பி வைக்கின்றோம். அந்த வகையில் இந்த வாரம்

Zealstudy Whatsapp group